மூன்றாம் கட்ட கலந்தாய்வு,
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மத்திய 'ஆயுஷ்' அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. ``` ```இந்நிறுவனத்தில், 2021- - 22ம் ஆண்டு பட்ட மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது.இதில், மொத்தம் உள்ள 58 இடங்களில், நிறுவன ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீத இடங்கள் நிரப்பபட்டன.
அனைத்து இந்திய, சித்த மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைத்தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்ற, தமிழகத்தைச் சேர்ந்த 70 சித்தா டாக்டர்கள் இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வின் வாயிலாக, நிறுவன ஒதுக்கீட்டு இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடங்கள் மற்றும் அயல்நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டன.
இதையடுத்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, ``` ```பிப்., 28 முதல் மார்ச் 3 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று கட்ட கலந்தாய்வுகளுக்கு பின், அகில இந்திய ஒதுக்கீடுக்கான இடங்கள் நிரப்பப் படாமல் மீதம் இருந்தால், அந்த இடங்களுக்கான கலந்தாய்வு பின்னர் தேதி அறிவிக்கப் பட்டுநடத்தப்படும்.
மேலும், பி.ஹெச்டி., ஆராய்ச்சிப் படிப்பிற்கான, நடப்பாண்டு மாணவர் சேர்க்கையின் நுழைவுத் தேர்வு, மார்ச் 6ல் நடைபெறும் என, நிறுவன இயக்குனர், மீனாகுமாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment