ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி அதிகபட்சமாக ரூ.25000 ஆகஉயர்த்தி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 22, 2022

ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி அதிகபட்சமாக ரூ.25000 ஆகஉயர்த்தி அறிவிப்பு

 

ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி அதிகபட்சமாக ரூ.25000 ஆகஉயர்த்தி அறிவிப்பு

 ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர பிரதேச அரசு ஊழியர்களுக்கு, அதிகபட்ச உச்சவரம்பு ரூ.25,000 உடன் வீட்டு வாடகைப்படி 24% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த வீட்டு வாடகை படி உயர்வு, அமராவதியில் உள்ள மாநிலச் செயலகம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட துறைத் தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்த நடைமுறை, வரும் 2024 ஆம் ஆண்டு மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாவட்டத் தலைமையகம் மற்றும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு – 16% வீட்டு வாடகை படி மற்றும் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.17,000 ஆகும்.

2. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு – 12 % வீட்டு வாடகைப்படியுடன், உச்சவரம்பு ரூ.13,000 ஆகும்.

3. மற்ற ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10% வீட்டு வாடகைப்படி, மேலும் திருத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி உயர்வு, 2022 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில் தமிழ் நாடு அரசு அதிக பட்சமாக அதிகபட்ச வீட்டு வாடகை படி இரண்டாம் நிலை நகரங்களில் 3200 உள்ளதாகவும். சென்னையில் மட்டுமே அதிகபட்ச வாடகை படி 8200 உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.  மேலும் கூறுகையில் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் படி மிகவும் குறைந்த அளவில் உள்ளது. இதை உயர்ந்த பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இன்று வரை நிவர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment