பணியில் சேர்ந்த 2004-ம் ஆண்டு முதல், பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்க கோரி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு - judgement copy Avail
புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் முத்து என்பவர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டார்.
பணியில் சேர்ந்த ```
```2004-ம் ஆண்டு முதல், பணி வரன்முறை செய்து பணப்பலன்கள் வழங்க கோரி முத்து அளித்த மனுவை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 2019-ல் நிராகரித்தார்.
அவரது உத்தரவை ரத்து செய்து 2004 முதல் பணி வரன்முறை செய்யக்கோரி முத்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மனுதாரர் 2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் 2004-ல் இருந்து பணி வரன்முறை செய்யக் கோரி 2019-ல் தான் மனு அளித்துள்ளார்.
மேலும் மனுதாரர் 2004-ல் பணி நியமன விதிப்படி பணி நியமனம் செய்யப்படவில்லை.
இதனால் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்
No comments:
Post a Comment