குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் ஆதார் எண் அவசியம்
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.```
``` அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.
இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
பிப்.23 முதல் விண்ணப்பிக்கலாம்
டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை தேர்வுத்துறைத் தலைவர்
பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார். வரும் 23ஆம் தேதி தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்று கூறினார்```
```. மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் என்றும் கூறினார். தேர்வுகள் மே 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.
ஜூன் மாதம் ரிசல்ட்
குரூப் 2, குரூப் 2 ஏ மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறினார். மே 21ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் பாலச்சந்திரன் கூறினார்.
எந்தெந்த பதவிகள்
காலியிடங்கள் மொத்தம் இன்டர்வியூ போஸ்ட் 116 இடங்களாகவும் நேர்முகத்தேர்வு அல்லாமல் 5413 காலியிடங்களும் உள்ளன. பத்திர பதிவுதுறையில் சப் ரிஜிஸ்டர் பதவிக்கு 17 காலி பணியிடங்கள் உள்ளன. தொழிலாளர் நலத்துறையில் அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபர் பதவிக்கு 19 காலி பணியிடங்களும் உள்ளன. முதல்முறையாக காவல்துறையில் ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.```
``` 58 பேர் இந்த குரூப் 2 மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்டர்வியூ முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ஆதார் எண் அவசியம்
குரூப் 2 ரெவின்யூ டிபார்ட்மென்டில் 462 பதவிகளும், கிராமப்புற மேம்பாடு பதவிக்கு 336 அசிஸ்டெண்ட்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் செய்பவர்கள் ஆதார் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
32 வயது வரை விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் 117 மையங்களில் தேர்வுகள் நடைபெறும். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலை 10 மணிமுதல் பிற்பகல்1 மணி வரை நடைபெற்ற நிலையில் இனி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை என்றும் மாலை 2 மணி முதல் 5 மணிவரை எழுதலாம். 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வாணையத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்
No comments:
Post a Comment