தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவிப்பு
தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுத தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வந்தது. வரக்கூடிய மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தல் அந்த நேரத்தில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களையே பொது தேர்வு மதிப்பெண்களாக வழங்கலாம் என்ற திட்டம் முதலில் தேர்வுத்துறைக்கும், கல்வித்துறைக்கும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திருப்புதல் தேர்வு தொடங்கியது முதல் ஒவ்வொரு கேள்வித்தாள்களும் முன்கூட்டியே வெளியானதன் காரணமாக தற்போது அந்த முடிவை தேர்வுத்துறை கைவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளும் தெளிவான சில விளக்கங்களை தெரிவித்துள்ளானர். எந்த காரணம் கொண்டும் இந்த திருப்புதல் தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படாது, இந்த தேர்வு எந்த காரணம் கொண்டும் முக்கிய பொது தேர்காக கருத்த படமாட்டாது, இந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், எந்தவிதத்திலும் கவலையடைய வேண்டாம், சமூக வலைத்தளங்களில் வெளியாகக்கூடிய கேள்வித்தாள்களை பெறுவதற்கு போட்டி போடா வேண்டாம் என வலிறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களை பொதுத்தேர்வு எழுத ஒரு அடைப்படை பயிற்சியாக மட்டுமே இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
2-ம் கட்ட திருப்புதல் தேர்வும், பொது தேர்வும் கட்டாயம் நடைபெறும் என்றும், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment