தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சத்திற்குள் கூடுதலான சிகிச்சைத்தொகை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான தொகையை 10 லட்சத்திற்கும் கூடுதலாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காப்பீடு நிறுவனங்களுக்கும் இது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை படி உயர்வு போன்றவைகளை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவ காப்பீடு திட்டத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் குறைவான தொகையில் சிகிச்சை பெற முடியும். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment