10, 12-பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள்
இன்று ஆலோசனை..!!
10 & +2 தேர்வுகள் இன்று ஆலோசனை:
10 & +2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
பள்ளி கல்வித்துறை முடிவு:
தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.1 to +2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், 6ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், 10, Plus 2 மாணவர்களுக்கு, ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இக்கூட்டத்தின் சாராம்சம்:
இதுதொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகளும், அரசு தேர்வு துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இந்த ஆலோசனையில்
- பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது;
- ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா.? (அ) தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா.? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
- Plus 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.
பின், சுகாதார துறையினருடன் ஆலோசிக்கப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment