பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 7, 2022

பிளஸ் 1 மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு

 பிளஸ் 1 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்தப்படும் என்று, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பிப்., 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. நடப்பு கல்வி ஆண்டுக்கான பாட திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேநேரத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 


அவர்களுக்கு இதுவரை எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. அதனால் அவர்களுக்கு, ``` ```பொதுத்தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களை தயார்படுத்தும் வகையில், உற்சாகமூட்டும் தேர்வு நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பல மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து தேர்வு நடத்தப்படும். 


ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் தேர்வு நடக்கும். இந்த தேர்வானது பயம் ஏற்படுத்தும் வகையில் இல்லாமல், மாணவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலான, உற்சாகமூட்டும் வகையிலான தேர்வாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment