டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது :
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ,ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9 ந் தேதியும்,தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22 ந் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற இருந்த தேர்வுகள் , மாற்று தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment