தீவிர ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 5 கடுமையான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் டெல்லி தெரிவித்துள்ளது. இந்த 5 அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை 35,367,760 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது 484,471 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் 141,374 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் அறிகுறிஓமிக்ரான் எவ்வளவு தீவிரம் கொண்டது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஏனென்றால் உலக சுகாதார மைய அதிகாரிகள் கூற்றுப்படி, ஓமிக்ரானை மைல்ட் வகை கொரோனா என்று நம்பி ஏமாந்து விட கூடாது. அதை சாதாரணமாக, அலட்சியமாக நினைத்துவிட கூடாது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதே சமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மருத்துவ வல்லுனர்கள், ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது. ஆனால் இது வலிமையானது இல்லை. இதை பார்த்து அச்சப்பட தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள்.இந்தியா ஓமிக்ரான்இதனால் ஓமிக்ரானை பார்த்து பயப்படலாமா வேண்டாமா என்ற குழப்பம் மக்கள் இடையே எழுந்துள்ளது. ஓமிக்ரான் ஏற்பட்டால் மொத்தம் 8 விதமான அறிகுறிகள் தோன்றும். தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இதுதான் இதுவரை உலகம் முழுக்க ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக தோன்றும் அறிகுறிகள் ஆகும்.கொரோனா வைரஸ் எய்ம்ஸ்இது போக கடந்த சில நாட்களுக்கு முன் ஓமிக்ரான் ஏற்படும் நபர்களுக்கு வாந்தி மற்றும் பசியின்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் பலருக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அந்த அறிகுறிகள் லிஸ்டில் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் 5 ஆபத்தான ஓமிக்ரான் அறிகுறிகளை எய்ம்ஸ் பட்டியலிட்டுள்ளது.ஓமிக்ரான் 5 அறிகுறிகள் எய்ம்ஸ்பின் வரும் 5 ஓமிக்ரான் அறிகுறிகள் ஏற்பட்டால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடலில் ஆக்சிஜன் அளவு சட்டென குறைவது. மற்ற ஓமிக்ரான் அறிகுறிகள் உள்ளவர்கள் தொடர்ந்து தங்கள் ஆக்சிஜன் அளவை சோதிக்க வேண்டும்.நெஞ்சுவலிதிடீரென நெஞ்சில் வலி ஏற்படுவது. அல்லது நெஞ்சில், இதயத்தில் ஒரு அழுத்தம் ஏற்படுவது மோசமான ஓமிக்ரான் அறிகுறிகளில் ஒன்று. இது ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அது போக மனக்குழப்பம் அல்லது பாலியல் ரீதியாக உணர்வு குழப்பம் ஆகியவையும் மோசமான ஓமிக்ரான் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. ஓமிக்ரான் அறிகுறிகள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
சுருக்கமான விளக்கம்
எய்ம்ஸ் குறிப்பிட்டு இருக்கும் 5 கடுமையான ஓமிக்ரான் அறிகுறிகள் மூச்சு விடுவதில் சிக்கல் உடலில் ஆக்சிஜன் அளவு சட்டென குறைவது திடீரென நெஞ்சில் வலி ஏற்படுவது அல்லது நெஞ்சில், இதயத்தில் ஒரு அழுத்தம் ஏற்படுவது மனக்குழப்பம் அல்லது பாலியல் ரீதியாக உணர்வு குழப்பம்:
No comments:
Post a Comment