Flash News : ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 6, 2022

Flash News : ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையரின் செயல்முறைகள்

 

.com/img/a/

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.


 மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS Online ) யில் பதிவேற்றம் எவ்வாறு செய்வது என்பது குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்யும் ( Model ) வழிமுறையினை பின்பற்றி செயல்படுமாறும் மேலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி அனைத்து மாவட்ட முதன்மைக் செயல்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியருக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை ( பள்ளிக்கல்வி ) 

1 ) ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் ( இணைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்களின் அடிப்படையில் ) submit செய்திடல் வேண்டும்.

2 ) அதன் தொடர்ச்சியாக சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி . Login ID ஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை View செய்து சரியாக அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என் உறுதி ( பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டுதல் ) செய்தபின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும் . 

3 ) மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும் .


Teachers Transfer Application Upload EMIS Website - Proceedings - Download here

No comments:

Post a Comment