1 ) மழலையர் காப்பகங்கள் ( Creche ) தவிர , மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் ( Play Schools ) , நர்சரிப் பள்ளிகள் ( LKG , UKG ) செயல்பட அனுமதி இல்லை.
2 ) அனைத்துப் பள்ளிகளிலும் , 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
3 ) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
4 ) அரசு , தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள் , தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
5 ) பயிற்சி நிலையங்கள் ( Training and Coaching Centres ) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகள்...
TN GOV Press News 5.8.2022 - Download here
*⭕தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!
*⭕இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு.
*⭕நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
*⭕அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதி.
*⭕ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
*⭕1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
*⭕பொதுத்தேர்வு எழுதுவோரின் எதிர்கால நலன் கருதி, 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்.
*⭕கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுப்பு (Study Leave).
*⭕பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை.
*⭕அரசு, தனியார் நிறுவனத்தால் நடத்தப்படும் பொங்கல், கலை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.
*⭕பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
*⭕வழிபாட்டுதலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.
*⭕அனைத்து கடற்கரைகளிலும் நடைபயிற்சிக்கு மட்டுமே அனுமதி.
No comments:
Post a Comment