ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & வன்நகல் எடுக்கும் வழிமுறை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 6, 2022

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & வன்நகல் எடுக்கும் வழிமுறை

 பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை  Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடே முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID (UDISE CODE) & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.

 Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாறுதல் கோரும் வகையில், *'ஒன்றியத்திற்குள் + மாவட்டத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் *'ஒன்றியத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் விடுபட்டுள்ளது. இது முன்னர் வழக்கத்தில் இருந்த நடைமுறையே. இது குறித்து மாநில EMIS குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதியும் சேர்க்கப்படலாம்.

பணிவரன்முறை தேதி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநில EMIS குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

 பள்ளித் தலைமையாசிரியர்கள் தமக்கான மாறுதல் விண்ணப்பத்தை அளித்தல் தொடர்பான சிக்கலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.

 தற்போது சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் சற்றே தாமதித்து விண்ணப்பிப்பதே நல்லது.

 பள்ளித் தலைமையாசிரியர்கள் எப்பொழுது APPROVAL கொடுக்கலாம் என்பது குறித்து சார்ந்த துறை அலுவலகம் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். அதுவரை பொறுமை காக்கவும்

No comments:

Post a Comment