லாக்டவுன் பீதி: அவசரம், அவசரமாக சொந்த ஊர்களுக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்.. அலைமோதும் கூட்டம்திருப்பூர்: தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் சென்று வரும் நிலையில் தினமும் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று அரசு அறிவித்தது.திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்அதன்படி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் அவசரம், அவசரமாக சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.கடுமையான லாக்டவுன் வரும் என்று பீதிதிருப்பூர் ரயில் நிலையத்துக்கு மூட்டை, முடிச்சுகளுடன் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் எந்த தளர்வுகளும் இல்லாத மிக கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று பயந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருவதாக கூறுகின்றனர்.ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறதுவடமாநில தொழிலாளர்கள் குவிந்து வருவதால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோவையில் இருந்து திருப்பூர் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. வடமாநில தொழிலாளர்கள் அச்சத்துக்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் கடந்த வருடங்களில் ஊரடங்கு போட்டபோது அவர்கள் பட்ட பாதிப்பை வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது.கடந்த காலத்தை மறக்க மாட்டார்கள்முழு ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அவர்களுக்கு சில நிறுவனங்கள் ஊதியம் வழங்கவில்லை. இதனால் உணவுக்கு கூட வழியில்லாமல் பரிதவித்தனர். பின்னர் படும்பாடு பட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். தமிழகத்தில் ஒருவேளை மிக கடுமையான லாக்டவுன் கொண்டு வந்தால் கடந்த முறை போல் மோசமான நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் வடமாநில தொழிலாளர்கள் இப்போதே சுதாரித்துள்ளனர்
No comments:
Post a Comment