சென்னையில் திடீரென பலருக்கும் காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் கொரோனா டெஸ்ட் மையங்களில் சோதனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் தினசரி கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் இறுதியில் தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் 1000க்கும் கீழ் பதிவாகி வந்தது. ஆனால் 2022 புத்தாண்டே "ஹலோ பீட்டர்" என்று ஸ்பைடர் மேன் பட வில்லன் போல கொடூரமாக தொடங்கி உள்ளது. ஆம் வெறும் 2 வாரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் பலமடங்கு உயர்ந்து உள்ளது.தினசரி கேஸ்கள் 1000 என்ற அளவில் இருந்து 13 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்து இருக்கிறது. மரணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.தமிழ்நாடு கொரோனாநேற்று தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ளனர். அதாவது அதிக அளவில் கேஸ்கள் பதிவாகிறது. ஆனால் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது ஒருவகையில் நம்பிக்கை அளிக்கும் செய்தி. மொத்த பலி எண்ணிக்கை 36,866 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து மேலும் 2,547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளன நிலையில் 62,767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எப்படி ஏற்படுகிறது?தமிழ்நாட்டில் பதிவாகும் மொத்த கேஸ்களில் பாதிக்கும் மேல் சென்னையில் பதிவாகி வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6190 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது கொரோனா ஏற்படும் பலருக்கு மிக மிக குறைவான அறிகுறிகளே உள்ளது. அதாவது லேசான காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி போன்ற அறிகுறிகளே உள்ளது. டிசம்பர், ஜனவரி மாதத்தில் பலருக்கு பனி காய்ச்சல் ஏற்படுமே அப்படிப்பட்ட அறிகுறிகள் ஏற்படுகின்றன.அறிகுறிகள்இதன் காரணமாக மக்கள் பலரிடையே அச்சம் பரவ தொடங்கி உள்ளது. நமக்கு இருப்பது சாதாரண பனி காய்ச்சலா.. அல்லது ஓமிக்ரான் பாதிப்பா என்று தெரியாமல் மக்கள் குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக சென்னையில் திடீரென மக்கள் கொரோனா டெஸ்ட் செய்யும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தங்களுக்கு எங்கே கொரோனா இருக்கிறதோ என்று அஞ்சி காய்ச்சல் உள்ள பலர் இப்படி கொரோனா டெஸ்ட் எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் சில டெஸ்ட் சென்டர்களிடமும், வீட்டிலேயே டெஸ்ட் எடுக்கும் ஆட்களிடமும் விசாரித்தோம்.ஒன்இந்தியா தமிழ் விசாரணைஇவர்களிடம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக விசாரணை நடத்தியதில், சென்னையில் கடந்த 2 வாரமா டெஸ்ட் அதிக வருது. மக்கள் திடீர்ன்னு புக் செய்து டெஸ்ட் செய்யணும் அப்படின்னு சொல்றாங்க. கடந்த இரண்டு மாசமா எங்களுக்கு நிறைய ஸ்லாட் ஃப்ரீயா இருந்தது. ஆனால் இப்போ அப்படி இல்லை. இப்போது அடுத்த வாரத்திற்கு டெஸ்ட் எடுக்கவே ஸ்லாட் இல்லாத அளவிற்கு நிறைய பேர் புக் செய்துவிட்டனர். மக்கள் பலர் அச்சத்தில் இருக்கிறார்கள் போல என்று அந்த ஊழியர் நம்மிடம் தெரிவித்தார்.தனியார் நிறுவனம்வீட்டிற்கே சென்று கொரோனா டெஸ்ட் செய்யும் நபர் ஒருவரிடம் விசாரித்ததில், நாங்கள் வீட்டிலேயே சென்று சோதனை சாம்பிள் எடுத்து வருகிறோம். இப்போதெல்லாம் சாதாரண காய்ச்சல் இருந்தாலே பலர் டெஸ்ட் செய்கிறார்கள் . நிறைய இடங்களுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. கடந்த மே மாதம் இப்படித்தான் நிறைய பேர் டெஸ்ட் எடுக்க கூப்பிட்டனர். அது மீண்டும் நடக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் என்று வருகிறது என்று எங்களுக்கு தெரியாது.. தினசரி கேஸ்களை பார்த்தாலே தெரியும்.. சென்னையில் கேஸ்கள் அதிகரித்து இருக்கிறது என்று, என அந்த நபர் நம்மிடம் தெரிவித்தார்.மக்கள் என்ன செய்கிறார்ஓமிக்ரான் அறிகுறியும், சாதாரண காய்ச்சல் அறிகுறியும் ஒரே மாதிரி இருப்பதால் இப்படி மக்கள் பலர் முன்னெச்சரிக்கையாக டெஸ்ட் செய்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இப்படி டெஸ்ட் எடுக்கும் பலருக்கு கொரோனா பாசிடிவ் என்று வருகிறது. சாதாரண காய்ச்சல் அறுகுறியோடு பலர் கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட்டை பெற்றுள்ளனர். இது பயமுறுத்த கூடிய செய்தியாக இருந்தால் பலர் மைல்ட் கேஸ்கள்தான். இவர்கள் மைல்ட் கேஸ்களாக இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அரசின் முடிவுஅதிலும் பலர் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின் டெஸ்ட் செய்தாலே நெகட்டிவ் என்று வரும் அளவிற்கு மைல்ட் கேஸ்கள் வருகின்றன. இப்படி காய்ச்சல் அறிகுறி உள்ள பலர் பாசிட்டிவ் என்று வருவதால்தான் தமிழ்நாடு அரசும் கொரோனா டெஸ்ட் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மக்கள் பலர் அடித்து பிடித்து டெஸ்ட் செய்து வருவதால் அரசு கொரோன டெஸ்டிங் செய்யும் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. இதனால்தான் ளி ,காய்ச்சல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அரசு தெரிவித்துள்ளது.சளி காய்ச்சல்சளி காய்ச்சல் இருப்பவர்கள் பலருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சளி காய்ச்சல் இருமல் உடல் வலி இருப்போருக்கு பரிசோதனை கட்டாயம். தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், இணை நோய் உள்ளவர் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.தொற்று பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment