பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஜயகாந்த் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 29, 2022

பள்ளிகளைத் திறப்பதில் அவசரம் வேண்டாம்: விஜயகாந்த்

 


.com/img/a/


நியோகோவ் என்கிற புதுவகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளைத் திறப்பதில் தமிழக அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் ``` ```வலியுறுத்தியுள்ளாா்.


இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோா்களும் ஆசிரியா்களும் மாணவா்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். தேமுதிகவும் வரவேற்கிறது.


அதேவேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதா்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனா். அதனால், பள்ளிகள் திறப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.


தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு``` ``` ரத்து செய்திருப்பது நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


எனவே, மாணா்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.


பொது தோ்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று அவா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment