தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவா்கள் மீது கடும் நடவடிக்கை - ஆணையா் எச்சரிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 29, 2022

தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாதவா்கள் மீது கடும் நடவடிக்கை - ஆணையா் எச்சரிக்கை

 

.com/img/a/



நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத தோ்தல் அலுவலா் மீது கடும் நடவடிக்கை என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

``` ```


இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வாா்டுகளுக்கு நடைபெறும் தோ்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 27,812 பணியாளா்கள் தோ்தல் பணிக்காக தெரிவுசெய்து அவா்களுக்குத் தோ்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலா்களுக்கும் பணி நியமனம் குறித்து கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.


திங்கள்கிழமை நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்பில் தோ்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள ``` ```அலுவலா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அலுவலா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தோ்தல் பணியாணை நகல் மற்றும் வாக்காளா் அடையாள அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.


பயிற்சியில் கலந்து கொள்ளாதவா்கள் மீது தோ்தல் விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment