தமிழ்நாட்டில் நாளை முதல் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் போடப்பட உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்தியாவில் 15-18 வயது சிறார்களுக்கான வேக்சின் நாளை முதல் போடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. வேக்சின் பெற தகுதி உள்ள சிறார்கள்தளத்தில் முன் பதிவு செய்யலாம் என்று அதன் தலைவர் டாக்டர் ஆர்எஸ் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.நாளை தேசிய அளவில் பல இடங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. ஓமிக்ரான் பரவலுக்கு இடையே சிறார்களுக்கு வேக்சின் செலுத்துவது முக்கியமான தேவையாக பார்க்கப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்இந்த நிலையில் தேசிய அளவில் சிறார்களுக்கு வேக்சின் போடப்படும் அதே நாளில் தமிழ்நாட்டிலும் வேக்சின் போடப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். அதன்படியே நாளை தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் போடும் பணிகள் தொடங்குகின்றன.தமிழ்நாடு வேக்சின்இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தின்படி, தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் நாளை காலை முதல் போடப்படும். இதற்காக நேரடியாக வந்து ஆன் சைட்டில் பதிவு செய்து வேக்சின் போடலாம். அல்லது கோவின் செயலியில் அருகில் இருக்கும் வேக்சின் முகாமை கண்டறிந்து அதில் முன் பதிவு செய்தும் கூட வேக்சின் போட்டுக்கொள் முடியும்.தமிழ்நாடு சிறார் வேக்சின்தமிழ்நாட்டில் சிறார்களுக்கு வேக்சின் போடுவதற்கான பணிகள் மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன. சிறார்கள் வேக்சிங் போட்டுக்கொள்ள நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இல்லை. அவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளிலேயே வேக்சின் போடும்படி வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படும். இதற்காக பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்படும். இதனால் அதிக அளவில் சிறார்கள் வேக்சின் போட்டுக்கொள்வார்கள்.15-18 வயது வேக்சின்தமிழ்நாட்டில் 33.46 லட்சம் சிறார்கள் வேக்சின் போட்டுக்கொள்ள தகுதி உடையவர்களாக உள்ளனர். சிறார்களுக்கு வேக்சின் போடுவதன் மூலம் அவர்கள் விரைவில் பள்ளிகளுக்கு திரும்ப முடியும்.முதல் கட்டமாக கோவாக்சின் போடப்படும். பின்னர் போதுமான விநியோகம் கிடைத்தபின் சைடஸ் கேடில்லா வேக்சின் போடப்படலாம் என்று சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.வேக்சின் முன்பதிவுசிறார்கள் வேக்சின் முன் பதிவை செய்ய பின்வரும் படிகளை பின்பற்ற வேண்டும். ://.../ தளத்தில் இதற்காக புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் சிறார்கள் தங்கள் ஆதார் உள்ளிட்ட 9 ஐடி கார்டுகளில் ஒன்றை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியும். போன் எண் கொடுத்து ஓடிபி மூலம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பள்ளி ஐடி கார்டை பதிவேற்றினால் போதும். சிறார்களுக்கு என்ன வேக்சின் போடலாம் என்பதை பெற்றோரே தேர்வு செய்ய முடியும்
No comments:
Post a Comment