இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் திருநாள் விடுமுறை! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, January 10, 2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு பொங்கல் திருநாள் விடுமுறை!


thumbnail

வரும் பொங்கல் திருவிழாவிற்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று தன்னார்வலர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. 34 % தன்னார்வலர்கள் போகிப்பண்டிகை உட்பட நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 29% தன்னார்வலர்கள் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 


17% தன்னார்வலர்கள் இல்லம் தேடிக் கல்வி குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாட போவதாக தெரிவித்துள்ளனர். 


3% தன்னார்வலர்கள் விடுமுறை எதுவும் வேண்டாம் என்றும் 17% தன்னார்வலர்கள் தைப்பூசம் வரை விடுமுறை வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 


பெரும்பான்மையான தன்னார்வலர்களின் கருத்தின்படி தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு போகிப்பண்டிகை உட்பட 4 நாட்கள் இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாட விரும்பும் தன்னார்வலர்கள் இந்தப் பொங்கலை  கல்விப் பொங்கலாக கொண்டாட அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 


தித்திக்கும் பொங்கலாய், இனித்திருக்கும் கரும்பாய் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் தன்னார்வலர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தகவல் :

க.இளம்பகவத் இ.ஆ.ப,

சிறப்புப் பணி அலுவலர்,

இல்லம் தேடிக் கல்வி.

No comments:

Post a Comment