மத்திய அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, January 4, 2022

மத்திய அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மற்றவர்கள் வீட்டில் இருந்து பணி செய்வார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் அலுவலகத்தில் அதிக கூட்டத்தை கூட்ட வேண்டாம் என்றும் அரசு ஊழியருக்கு 50 சதவீத ஊழியர்களும் வெவ்வேறு நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் அனைத்து ஊழியர்களும் அலுவலத்திற்கு வரவேண்டாம் என்றும் துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகள் உள்ளவர்கள் மட்டும் அலுவலகம் வந்தால் போதும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment