அஞ்சல் நிலையத்தின் Gram Suraksha Scheme மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 50 ரூபாய் சேமித்து, மாதம் 1515 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் முதிர்வு தொகையாக 31 லட்சம் கிடைக்கும். இந்த வகையில் குறைந்த ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு காரணமாக மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்கின்றனர்.
31 லட்சம் வரை ரிட்டன்ஸ்:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு பாதிப்பை பொதுமக்கள் அடைந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீடு மக்களின் கஷ்ட காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த வகையில் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆஃபீசிகளிலும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வதை மக்களை அதிகம் விரும்புகின்றனர்.
போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காரணத்தால் நிலையான லாபம் மற்றும் 100 சதவீதம் பாதுகாப்பை அளிக்கிறது. தற்போது தபால் நிலையத்தில் Gram Suraksha Scheme மிகவும் பிரபலமான திட்டமாக உள்ளது. இந்த திட்டம் ரிஸ்க் குறைவாகவும், அதிகப்படியான லாபமும் கிடைக்கும் காரணத்தால் நடுத்தர மக்கள் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இந்த Gram Suraksha திட்டத்தில் சேர வேண்டும் என்றால் மாதம் 1500 ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் சேர உள்ளவர்கள் வயது 19 முதல் 55 வரை இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் ரூ.10,000 முதல் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து லாபம் பெறலாம். இத்திட்டத்திற்கு மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் ப்ரீமியம் செலுத்தலாம். இந்த வகையில் 19 வயதுடைய நபர் ஆக 10 லட்சம் ரூபாய் தேர்வு செய்தால், 55 வயது வரையில் மாதம் 1515 ரூபாய் செலுத்த வேண்டும், இந்த கணக்கில் தினமும் 50.5 ரூபாய் ஆகும். இதன் மூலம் 55 வயதில் ரிட்டன்ஸ் 31.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுவே 60 வருடம் வரையில் ப்ரீமியம் செலுத்தினால் 34.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த வகையில் ரிஸ்க் இல்லாமல், இத்திட்டம் அதிக முதிர்வு தொகை தருவதால் மக்கள் அதிகம் பயன் பெறுகின்றனர்.
No comments:
Post a Comment