தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், வரும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது.குறிப்பாகத் தினசரி கேஸ்கள் மீண்டும் 15 ஆயிரத்தை நெருங்குகிறது. அதேபோல ஆக்டிவே கேஸ்களின் எண்ணிக்கையும் 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது, இந்நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்க்க மாநிலத்தில் வரும் ஜன.31 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வரும் ஜன. 14 முதல் ஜன. 18 வரை வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி இல்லை. ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.TN GOV Lockdown Extension Press News 10.01.2022 - Download here..
No comments:
Post a Comment