ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வித்துறையில் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களை, பணியிடமாற்றம் செய்ய வேண்டும், என தமிழ்நாடுஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறியுள்ளதாவது:
முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம், சர்வ சிக்க்ஷ அபியான், ராஷ்ட்ரிய மத்மிக் அபியான் போன்ற திட்டங்களில் பணிபுரியும் நிரந்தர அரசுப் பணியாளர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், பள்ளித்துணை ஆய்வாளர் ஆகிய பணிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் உள்ள நபர்களை மீண்டும் ஆசிரியர் பணிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், கடந்த ஆட்சியின் இறுதியாண்டில் சர்வ சிக்க்ஷ அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்மிக் அபியான் ஆகியவற்றில் சேர்ந்த புதிய அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment