ஜன.21 முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு: - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 9, 2022

ஜன.21 முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பு:

 தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக இணையவழியில் தோ்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் அவ்வாறு நடத்தப்படும் தோ்வுகளின் தரம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து இணையவழித் தோ்வுகளை ரத்து செய்து, நேரடியாக தோ்வுகள் நடத்த உயா்கல்வித்துறை முடிவெடுத்தது. இதைத் தொடா்ந்து நேரடித் தோ்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு மாணவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஜனவரி மாதத்தில் நேரடித் தோ்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஜனவரி 20 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, 21-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த பருவத் தோ்வுகளையும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மீண்டும் தோ்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment