தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவும் என்ற நிலையில் எப்படி படித்தால் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
தேர்வுக்கு தயாராகும் முறை:
TNPSC தேர்வு வாரியம் தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்பும் விதமாக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த குரூப் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோரால் எழுத்தப்படும். ஏனெனில் இந்த தேர்வு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறது என்ற காரணத்தினால் மட்டுமே. இந்த குரூப் 4 தேர்வானது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு தேர்வுக்கு அதிக அளவில் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் தேர்வுக்கு எப்படி படித்தால் தேர்ச்சி பெற முடியும் என்று தயாராகும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம். அதற்கு முன்பு குரூப் 4 தேர்வுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
குரூப் 4 பதவிகள்:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7 பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு மட்டும் 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 30 வயது ஆகும். அரசின் விதிகளின்படி உள்ள இதர பிரிவினருக்கு 35 வரை வயது வரம்பு விலக்கு உண்டு. கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு. அதனை தொடர்ந்து மேல்நிலை, பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
இந்த தேர்விற்கு மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 300 மதிப்பெண் வழங்கப்படும். அந்த 200 வினாக்களில் 100 வினாக்கள் மொழிப்படங்களில் இருந்தும், 75 வினாக்கள் பொதுஅறிவு மற்றும் 25 வினாக்கள் திறனறி தேர்வு அடிப்படையில் கேட்கப்படும்.
பாடத்திட்டம்:
மொழிப்படங்களில் கேட்கப்படும் 100 வினாக்கள் அடங்கிய மொழித்தகுதி தேர்வில் 40% மதிப்பெண் கட்டாயம் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அடுத்த பகுதி வினாத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 100 வினாக்களில் 75 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்தும், 25 வினாக்கள் திறனறி வினாக்களும் கேட்கப்படும்.
தேர்வுக்கு தயாராகும் முறை:
தேர்வுக்கு முதலில் கேட்கப்படும் மொழித்தகுதி தேர்வுக்கு முற்றிலும் 6 முதல் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் இடம்பெறும். உங்களுக்கு நேரம் இருந்தால் 11 மற்றும் 12ம் வகுப்பு தமிழ் பாடபுத்தகங்களையும் படித்துக்கொள்ளுங்கள். அவற்றை முழுமையாக படித்தாலே 90 முதல் 95 வரை மதிப்பெண் பெறலாம்.
பொது அறிவு மற்றும் திறனறி வினாக்களும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாட புத்தகத்தில் இருந்து மட்டுமே வினாக்கள் பெருமளவு இடம்பெறும். நடப்பு நிகழ்வுகளை பொறுத்தவரை தேர்வு அறிவிப்புக்கு முன் 6 மாதம் முதல் 1 வருடத்திற்கான நடப்பு நிகழ்வுகளை ஒரு நாளைக்கு 1 மணி நேரம் படித்தால் போதுமானது. பின்பு கணித பாடத்தில் கவனத்தை செலுத்தினால் அவையே போதுமான அளவு மதிப்பெண் பெற வழிவகுக்கும்
No comments:
Post a Comment