இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கலாமா? வேண்டாமா? என்று தேசிய நிபுணர் குழுவினர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.இந்தியாவில் கொரோனாவைரஸ் கலக்கம் இன்னும் நீங்காத நிலையில், அதற்குள் ஒமைக்ரான் வைரஸ் மிரட்ட வந்துள்ளது..இதுவரை ஒமைக்ரான் வைரஸூக்கு 23 பேர் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்: தொழில்நுட்ப தேசிய ஆலோசனைக்குழு இன்று முக்கிய முடிவுஇந்தியாஎனினும், ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் பரவத் தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது..ஆலோசனை18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கலாமா? என்றும் தடுபூசிக்கான தேசிய தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது... ஒருவேளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால், முதியோர், இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.இருவேறு கருத்துக்கள்இதற்கு முன்பு இதுகுறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திலும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்த இருவேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. பூஸ்டர் தடுப்பூசி தேவை இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.. கொரோனா பரவல் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம் என்று மேலும் சில நிபுணர்கள் தெரிவித்தனர்... ஆனால், சில நிபுணர்கள் மட்டுமே 3-வது கட்ட தடுப்பூசியை மத்திய சுகாதாரத் துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்..இன்று தெரியும்இப்படி நிபுணர்களின் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக நடந்து முடிந்த கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், இன்றைய கூட்டத்தில் அதற்கான முடிவு தெரிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. சீரம் நிறுவனம் தனது தயாரிப்பான கோவிஷீல்டின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரிய நிலையில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment