மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதனை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
மொத்த காலி பணியிடங்கள்: 12 கீழே கொடுக்கப்பட்டுள்ள காலி பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.
இப் பணியிடத்திற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இப்பணியிடத்திற்கு கல்வித்தகுதி 8-ம் வருப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2021-ல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்(அருந்ததியினர்) ஆகியோருக்கு அதிகபட்ச வயதாக 37 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) ஆகியோருக்கு 34 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன், விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான முத்திரை வில்லை ஒட்டப்பட்ட 25*10 செ.மீ. அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ எதிர்வரும் 22.12.2021 மாலை 5.45 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்.
No comments:
Post a Comment