புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமி ருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய் வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என எதிர்பார்ப்பு எழுந்துள் ளது .
தமிழக அரசு ஊழியர்களுக்கு , பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டுவருகிறது . புதிய ஓய்வூதியத் இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை அரசு ஊழி யர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது . இதனிடையே , 2003 - க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய் வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர் .
இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ .44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21 - ஆம் ஆண்டுக் கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
2008 - ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு ( 2003 ) பிடித்தம் செய் யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப் பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்துவந்தது . இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய் வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ . 27 - ஆம் தேதி வழங்கப் பட்டது.
ஆனாலும் , அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளி யிடப்படவில்லை . ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தில் ( எல்.ஐ.சி. ) முதலீடு : இந்நி லையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப் பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியி லும் , ஏல அடிப்படையிலான கரு வூலப்பட்டியிலும் ( Treasury Bill ) முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த 2019 - ஆம் ஆண்டு மே 30 - ஆம் தேதி முதல் முறையாக ரூ .2,500 கோடி , ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது . தற்போதுவரை 8 தவணைகளில் ரூ .25,510 கோடி முதலீடு செய்யப் பட்டுள்ளது . அதற்கு வட்டியாக ரூ .2,759.13 கோடியுடன் சேர்த்து , மொத்தம் ரூ .28,269.13 கோடி உள் ளது . மேலும் , ஏல அடிப்படையி கருவூலப்பட்டியில் லான தற் போது வரை ரூ .16,500 கோடி முத லீடு செய்யப்பட்டுள்ளது . மொத் தம் ரூ .44,769 கோடி முதலீடு செய் யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .
இதன் மூலம் சுமார் ஆண்டுக ளாக அரசு ஊழியர்களிடம் பிடித் தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுல கிற்கு தெரிய வந்துள்ளது .
இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்
: பிடித்தம் செய்யப் பட்ட பங்களிப்பு நிதியின் நிலவ ரம் குறித்து தெரியாததால் , கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும் , பணியின் போது உயி ரிழந்தும் , விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . தற்போது பங்களிப்பு நிதி முத லீடு செய்யப்பட்ட விவரம் , தக வல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால் , இனி யாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப
ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண் டும் என புதிய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள் ளது . இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங் கிணைப்பாளர் பி.பிரெடேரிக் ஏங் கல்ஸ் கூறியதாவது : இந்தியாவில் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங் களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவருகிறது . ஆனால் , தமிழகத்தில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டம் , புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்த வொரு முடிவும் இறுதி செய்யப் படாமல் உள்ளது . புதிய ஓய்வூதி யத் திட்டம் ரத்து செய்யப்படும் நிலையில் , தமிழக அரசுக்கு சுமார் ரூ .23,000 கோடி உபரி நிதியாக கிடைக்கும் என்பதையும் சுட்டி காட்டி வருகிறோம் . திமுகவின் தேர்தல் வாக்குறுதிப் படி , புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் . இதன் மூலம் , புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற சுமார் 23,000 பேர் உடனடியாகப் பயன் பெறவும் , எதிர்காலத்தில் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் பயன் பெறவும் முடியும் என்றார்
No comments:
Post a Comment