கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 23, 2021

கல்வி உதவித்தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

 

 

.com/

தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு பாரத பிரதம மந்திரியின்‌ கல்வி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்கு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.


கல்வி உதவித்தொகை:


தமிழகத்தில் மாணவ, மாணவியர் தங்கள் கல்லூரி படிப்பை தொடருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு தேவையான கல்வி உதவித்தொகையை பாரத பிரதம மந்திரியின்‌ கல்வி உதவி திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 2021-2022 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 12ம் வகுப்பில் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்களுக்கு மேல்‌ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அத்துடன் முதலாம்‌ ஆண்டு பொறியியல்‌, மருத்துவம்‌, கால்நடை மருத்துவம்‌, பி.டெக்‌, பி.எஸ்‌.சி. நர்சிங்‌, பி.எஸ்‌.சி. விவசாயம்‌, பி.எட்‌ படிப்பு மற்றும்‌ எம்‌.பி.ஏ., எம்‌.சி.ஏ., சட்டம்‌ மற்றும்‌ பல தொழிற்கல்விகள்‌ படிக்கும்‌ மாணவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தற்பொழுது முன்னாள்‌ படைவீரரின்‌ மகளுக்கு ரூ.36,000 கல்வி உதவித்தொகையும், மகனுக்கு ரூ.30,000 கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருகிற 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.


இதனை http://www.ksb.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கால அவகாசத்தை நீட்டித்துள்ளதால் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இதனை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று தருமபூரி மாவட்ட ஆட்சியர்‌ திவ்யதர்சினி அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கு பதிவு செய்த விண்ணப்பத்தினை தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment