கர்நாடகாவில் தேவனாகிரி மாவட்டத்தில் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் அவரது தலையில் குப்பைத் தொட்டியை கவிழ்த்து அத்துமீறிய சம்பவம் தொடர்பாக அந்த மாநில பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தேவனாகிரி மாவட்டம் சன்னகிரி நகரில் நல்லூரில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு கடந்த 3ஆம் தேதி ஆசிரியர் பாடம் நடத்த பள்ளி வகுப்பறைக்குள் வந்துள்ளார்.அப்போது அவர் அங்கிருந்த குட்கா காலி பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து உள்ளே வந்த ஆசிரியர், இந்த குட்கா பாக்கெட்டுகளை யார் பயன்படுத்தியது? என கேட்டுள்ளார். இது போல் கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.மாணவர்கள் கூச்சல்போதை வஸ்துகளை பயன்படுத்தக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதையடுத்து அவர் பாடம் நடத்த தொடங்கினார். அப்போது கரும்பலகையில் அவர் எழுதி கொண்டிருந்த போது ஒரு சில மாணவர்கள் கூச்சலிட்டனர்.குப்பைத் தொட்டிஅவர் திரும்பி பார்த்த போது அமைதியாக இருந்தனர். இது போல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர் பாடம் நடத்தி கொண்டிருந்த போது வகுப்பறையில் இருந்த குப்பைத் தொட்டியை ஆசிரியரின் தலை மீது கவிழ்த்தனர்.வைரல் போட்டோஇதை அங்கிருந்த ஒரு மாணவன் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து இந்த விவகாரம் பள்ளிக் கல்வித் துறையின் கவனத்திற்கு சென்றது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறுகையில், சன்னகிரியில் உள்ள நல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியரை மாணவர்கள் சீண்டியதை பொறுத்துக் கொள்ள முடியாது. கல்வித் துறையும் காவல் துறையும் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. நாங்கள் எப்போதும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக உள்ளோம் என்றார். மாணவர்கள் இத்தனை செய்தாலும் அந்த ஆசிரியர் அவர்களது எதிர்காலம் கருதி காவல் துறையில் புகார் அளித்த மறுத்துவிட்டாராம்.இப்படியும் ஒரு ஆசிரியர் இருக்கும் நிலையில் மாணவர் சமுதாயம் நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்ளும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
No comments:
Post a Comment