டெல்லி: உலகம் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 90 நாடுகளுக்கு மேல் பரவி அச்சத்தை ஏற்படுத்துகிறது.தென் ஆபிரிக்க மருத்துவ நிபுணர்கள் இந்த உருமாறிய வைரஸ் ஆபத்தில்லை என்று கூறியபோதிலும் இது மிகவும் ஆபத்தானது. டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஓமிக்ரான் வைரஸ்ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியா மிகவும் கவனமாக இருந்த போதிலும் நமது நாட்டிலும் ஓமிக்ரான் புகுந்து விட்டது. இந்தியாவில் வேகமாக பரவும் ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது, டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் 57 பாதிப்புகளும், மகாராஷ்டிராவில் 54 பாதிப்புகளும் உள்ளன.மாநிலம் வாரியாக பாதிப்புகள்இது தவிர தெலுங்கானாவில் 24, கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15 மற்றும் குஜராத்தில் 14 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் மூன்று கேஸ்களும், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா இரண்டு கேஸ்களும் பதிவாகியுள்ளன. ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், லடாக், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு பாதிப்பு பதிவாகியுள்ளது.பிரதமர் மோடி நாளை ஆலோசனைஇப்படி நாடு முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்க, ஓமிக்ரான் வைரஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை மருத்துவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டில் இந்த வைரஸ் எந்த நிலையில் உள்ளது? மாநிலங்களில் இதனை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்கிறார். ஓமிக்ரான் மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? நாட்டில் இரவு நேர ஊரடங்கை கொண்டு வரலாமா? என்பதும் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எச்சரிக்கை மணிதேவைப்பட்டால் மாநிலங்கள் இரவு ஊரடங்கு போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில் இது தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. ஓமிக்ரான் தவிர, டெல்டா வைரஸ் மாறுபாடும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவதாக மத்திய சுகாதாரர்த்துறை ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment