தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது ரத்து செய்வது குறித்து நாளை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
நேரடி வகுப்புகள் ரத்து:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் இயங்கிவருகிறது. தற்போது சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து நாளை முதல்வர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் சுழற்சி முறை வகுப்புகள் தவிர்க்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது கொரோனா வைரஸின் புதிய வகை மாற்றமாக ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேரடி வகுப்பால் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஓமைக்ரான் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், மேலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது பெரிய ஆபத்தில் முடியும் என்று தெரிவித்துள்ளது. நோய்த் தாக்கம் அதிகரித்து வருகிற சூழலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் மீண்டும் தொடர்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment