சைபர் பிரிவு கண்காணிக்கிறது: ஹெலிகாப்டர் விபத்து: தவறாக பதிவிட்டால் சட்ட நடவடிக்கை போலீஸ் எச்சரிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 10, 2021

சைபர் பிரிவு கண்காணிக்கிறது: ஹெலிகாப்டர் விபத்து: தவறாக பதிவிட்டால் சட்ட நடவடிக்கை போலீஸ் எச்சரிக்கை

 ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவது, தவறாக பதிவு செய்வதை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணிக்கிறார்கள், தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை வரும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்தவர்கள் கண்ணியத்திற்கு மதிப்பு கொடுங்க.. விமானப்படை வேண்டுகோள்ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பலிஊட்டி வெலிங்டன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த முப்படை தளபதி அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்கள். விபத்து குறித்து ஆய்வு நடத்த கருப்புப் பெட்டியை தேடி கண்டுபிடித்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்த முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விமானப்படை அதிகாரி ஒருவரை நியமித்துள்ளனர். அதேபோல் தமிழக காவல்துறையில் ஏடிஎஸ்பி அதிகாரி நியமிக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.உடல் அடக்கம் முன்னரே தொடங்கிய வதந்திகள்பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என வதந்திகள் பல கிளப்பி விடப்பட்டன, சமூக வலைதளங்களில், வாட்ஸ் ஆப் களில் சுடப்பட்டதால் விபத்து என்றெல்லாம் பரப்பினர். ஆனால் நிபுணர்கள் அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த முடியாது என விளக்கம் அளித்தனர். இன்னும் சிலர் சீன சதி, நக்சல் சதி, அமெரிக்க கோபம் என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர்.விசாரணை முடியும் முன்னரே நச்சுக்கருத்துகள்விபத்து நடந்ததற்கான காரணம் என்னவென்பதை அதுகுறித்து நடத்தப்படும் விசாரணை, தடயவியல் விசாரணை உள்ளிட்ட பல விஷயங்களுக்குப்பின் வெளிவரும். பல விசாரணை அமைப்புகள் மிகுந்த சிரமத்துக்குப்பின் கண்டுபிடிக்கும் முடிவை சிலர் எளிதாக மனம் போன போக்கில் இதுதான் காரணம் என பதிவிடுவதும், சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளை ஆதரித்து பதிவிடுவதும் சமூகத்தில் பதற்றத்தை அதிகரித்துவிடும்.சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் பதிவுகள்சிலர் தமிழக மக்களைப்பற்றியும், சில குறிப்பிட்ட கட்சிகள் குறித்தும் சில குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாகவும், சில பிரிவினைவாத கருத்துகளை குறிப்பிட்டும் சமூக பதற்றம் ஏற்படுத்தும் விதத்தில் பதிவிடுகின்றனர். இதனால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு கெடும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்பதால் போலீஸார் எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளனர்.கண்காணிக்கும் சைபர் க்ரைம், உளவுத்துறை போலீஸ்சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்தை வெளியிட்ட மாரிதாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 153, 505(2) உள்ளிட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இதேப்போன்று பலரும் ட்விட்டர், ஃபேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றமான கருத்துகளை பரப்புகின்றனர். இவைகளை சைபர் க்ரைம், நுண்ணறிவு, உளவுத்துறை போலீஸார் கண்காணிக்கிறார்கள்.கைது நடவடிக்கை, சிறை நிச்சயம்ஆகவே இதுகுறித்த சமூக அக்கறை இல்லாமல் மனம் போன போக்கில் வதந்தி பரப்புவது, அவதூறு பரப்புவது, சர்ச்சையை கிளப்பும் பதிவுகளை செய்தால் கட்டாயம் சட்ட நடவடிக்கை உண்டு என காவல்துறை எச்சரித்துள்ளது. கைது நடவடிக்கை கட்டாயம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment