அரசு, தனியார் நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆலைகள், கல்விநிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினைச் செம்மைப்படுத்திடவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விழாக்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்தும் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நடைபெறும் விழாக்களிலும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்த ஆணையிட்டுள்ளது.
நாட்டுப்புற கலைகளை அரசு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக்க நடவடிக்கை மேற்கொள்ள தொழில் மற்றும் வணிக வரித்துறை ஆணையகம், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளை பாதுகாத்திடவும், கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்திடவும், கலைகளை மக்களிடம் பரப்பி அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment