ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 11, 2021

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 


டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

.com/img/a/

ஆணைகளின் படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பலதுறைகளைச் சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர் . மேலும் , இம்முகாம்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற உள்ளனர் . இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும் , திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும் . எனவே , இவ்வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க அனைத்து வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம். தமிழ்நாட்டைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் பெருவாரியாக இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெறுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் திரு.கொ. வீர ராகவ ராவ் , இ.ஆ.ப. , அவர்கள் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment