மாணவிகளுக்கு ஏஐசிடிஇ உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 2, 2021

மாணவிகளுக்கு ஏஐசிடிஇ உதவித் தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

 உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சாா்பில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க டிச.15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடா்பாக அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் படிப்புகளில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஏஐசிடிஇ சாா்பில் பிரகதி திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, சக்ஷம் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி நிகழாண்டு பிரகதி மற்றும் சக்ஷம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த அக்.29-இல் தொடங்கி நவ.30-ஆம் தேதி நிறைவு பெற்றது.


தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிப்பதற்கான அவகாசம் டிச.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள்  வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment