முதல் பலி.. ஓமிக்ரான் காரணமாக யு.கேவில் முதல் நபர் பலி.. மக்களுக்கு எச்சரிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 13, 2021

முதல் பலி.. ஓமிக்ரான் காரணமாக யு.கேவில் முதல் நபர் பலி.. மக்களுக்கு எச்சரிக்கை


யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.ஓமிக்ரான் பரவல் உலகம் முழுக்க அதிகரித்து வருகிறது. பெரிய அளவில் மரணங்கள் ஏற்படவில்லை என்றாலும் கூட கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.தற்போது வரை இந்தியாவில் 38 பேரிடம் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் வேகம் காரணமாக கேஸ்கள் இன்னும் உயரும் என்ற அச்சம் உள்ளது.ஓமிக்ரான் வேகம் 'தற்போது யு.கேவில் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 27ம் தேதி ஓமிக்ரான் யு.கேவில் கண்டறியப்பட்டது. அப்போது தொடங்கிய கேஸ்கள், தற்போது அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் அங்கு பதிவான புதிய கேஸ்களில் 40 சதவிகித கேஸ்கள் ஓமிக்ரான் வகை கேஸ்கள் ஆகும். அங்கு 600க்கும் அதிகமானோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.அதிகம்ஓமிக்ரான் கொரோனா காரணமாக யு.கேவில் ஏப்ரலுக்குள் 75 ஆயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு உள்ளதாகவும்நடத்திய ஆய்வு அறிக்கை சொல்கிறது. இந்த நிலையில்தான், யு. கேவில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக முதல் பலி ஏற்பட்டுள்ளது என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மருத்துவமனையில் பலியானார்.யுகே கொரோனா மரணம்இது தொடர்பாக யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் அளித்துள்ள பேட்டியில், ஓமிக்ரான் ஆபத்தானது, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஓமிக்ரான் காரணமாக மக்கள் அதிக அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒருவர் தற்போது நமது நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார். இது வேண்டுமென்றால் கொஞ்சம் வலிமை குறைந்த கொரோனா வகையாக இருக்கலாம்.ஓமிக்ரான் மரணம்ஆனால் இது பரவும் வேகத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட கூடாது. மக்கள் இடையே மிக அதிக வேகத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவி வருகிறது. இதனால் மக்கள் உடனடியாக வேக்சின் போட வேண்டும். வேக்சின் போட்டவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று யு.கே பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment