சென்னை மாங்காடு மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 20, 2021

சென்னை மாங்காடு மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது

 கல்லூரி மாணவரின் ஆபாச தொல்லை காரணமாக சென்னை மாங்காடு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. மேலும் அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூந்தமல்லியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த 17 வயது மாணவி நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் மாணவி எழுதிய 3 கடிதங்கள் கிடைத்தன. அதில் "எனக்கு வாழ பிடிக்கவில்லை. என்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர். வெளியில் சொன்னால் என்னைதான் தவறாக பேசுவார்கள். டீச்சர் மகன்என்னை நீ பொண்ணுனு கூட பார்க்கவில்லை. நீ எல்லாம் டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாதே. நீ எல்லாம் இருக்கவே கூடாது. கடவுள் உன்னை விரைவில் தண்டிப்பார். இதற்கு மேல் முடியாது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க வேண்டும். என்னால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை. கனவு வந்து டார்ச்சர் பண்ணுது. என்னால படிக்கவே முடியலை.தாயின் கருவறைகல்லறையும் தாயின் கருவறையும்தான் பாதுகாப்பானது. யாரையும் நம்பாதீங்க. ஆசிரியர், உறவினர்கள் என யாரையும் நம்ப வேண்டாம் என எழுதியிருந்தார். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து 3 தனிப்படை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியவர்கள் யார் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.தோழிகள்அவரது நெருங்கிய நண்பர்கள், தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த விசாரணை நடந்தது. இதில் மாங்காட்டை சேர்ந்த என்ஜீனியரிங் படிக்கும் மாணவர் விக்னேஷ் என்பவர்தான் மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி இருப்பது தெரியவந்தது.ஆபாச மெசேஜ்அவரது வாட்ஸ் ஆப்பிலிருந்து மாணவிக்கு ஆபாசமாக மெசேஜ் பதிவிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவர் விக்னேஷை போலீஸார் கைது செய்தனர். அவர் சோமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் மீது போக்சோ, பெண் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மாலை நேரத்தில்விசாரணையில் மாணவி மாலை நேரத்தில் டைப்பிங் கிளைஸ் சென்று வந்துள்ளார். அவருக்கும் விக்னேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரும் மாணவி ஏற்கெனவே படித்த பள்ளியில் படித்திருக்கிறார். இந்த பழக்கத்தால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளதாக தெரிகிறது. மாணவி சாதாரணமாக நெருங்கி பழகியதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய விக்னேஷ் அவரிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளாராம். வாட்ஸ் ஆப்பிலும் ஆபாசமாக சாட் செய்துள்ளாராம்.மாணவியுடன் விக்னேஷ் எடுத்த புகைப்படங்கள்மாணவியுடன் விக்னேஷ் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், வீடியோக்கள், சாட் விவரங்களையும் போலீஸார் ஆதாரமாக திரட்டியுள்ளனர். எனவே விக்னேஷின் ஆபாச தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை கடிதத்தில்  உறவினர்களையும் நம்ப வேண்டாம் என மாணவி எழுதி வைத்துள்ளார். எனவே அடுத்தடுத்து நிறைய பேர் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது

No comments:

Post a Comment