ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, December 19, 2021

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் விரைவில் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

 

.com/

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் இடமாறுதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.அதை ஏற்று, கவுன்சிலிங்கை நடத்துவதற்கான விதிமுறைகளை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இனி ஒரே இடத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் போன்ற உத்தரவுகள் உள்ளது.


இந்நிலையில், இடமாறுதல் கவுன்சிலிங்கை ஜனவரியில் நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும் என்றும், கவுன்சிலிங் அட்டவணை இன்று வெளியாகும் என்றும் தெரிகிறது.

No comments:

Post a Comment