பொங்கல் விழா முடியும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒமிக்ரானாலும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்திலும் நோய் தடுப்புக்காக வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனாலும் நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தமிழக அரசு, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றையும், பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் கவனத்தில் கொண்டு மாணவர்களின் உடல் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விழா முடியும் வரை விடுமுறை அளிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment