ஆதிதிராவிட மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியீடு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 3, 2021

ஆதிதிராவிட மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியீடு.

 ஆதிதிராவிட மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையில் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். “ஆதிதிராவிட மாணாக்கரின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக தங்கி கல்வி பயிலும் வகையிலும், வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.”


மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆதிதிராவிட மாணாக்கரின் உயர் கல்விக்கான வாய்ப்புகளை பெருக்கிடும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக தங்கி கல்வி பயிலும் வகையிலும், வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்டம், மரவனேரி ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் ரூ.10,75,00,000/- (ரூபாய் பத்து கோடியே எழுபத்தைந்து இலட்சம் மட்டும்) மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் பணிகளை  மேற்கொள்ள, நிர்வாக அனுமதி அளித்தும் நிதி ஒதுக்கீடு செய்தும்  அரசாணை (நிலை) எண்:86, ஆ.தி.(ம)ப.ந.  (ஆதிந2(1)) துறை, நாள் :10.11.2021- ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை  மேற்கொள்ள, நிர்வாக அனுமதி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் இத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். “பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 318 உண்டி உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 14 தொடக்கப்பள்ளிகள், 11 நடுநிலைப்பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள், 9 மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.15 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகளும், 45 உண்டி உறைவிடப் பள்ளிகளில் ரூ.6.13 கோடி செலவில் சுற்றுச்சுவர்களும் மொத்தம் ரூ.21.13 கோடி செலவில் கட்டப்படும்”

இவ்வறிவிப்பிற்கிணங்க, பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 39 உண்டி உறைவிடப் பள்ளிகளில் 65 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1495.00 இலட்சம் (பதினான்கு கோடியே தொண்ணூற்று ஐந்து இலட்சம்) மற்றும் 34 உண்டி உறைவிட பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.614.16 இலட்சம் (ரூபாய் ஆறு கோடியே பதினான்கு இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) ஆக மொத்தம்  ரூ. 2109.16 இலட்சம் (ரூபாய் இருபத்தொரு கோடியே ஒன்பது இலட்சத்து பதினாறாயிரம் மட்டும்) செலவில் வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை  மேற்கொள்ள, நிர்வாக அனுமதி அளித்து  அரசாணை (நிலை) எண்:92, ஆ.தி.(ம)ப.ந.  (ஆதிந2(1)) துறை, நாள் :23.11.2021- ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment