ஓமிக்ரான் பாதிப்பு உயர்வு.. ரிஸ்க் எடுக்காதீங்க.. மக்களுக்கு மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 17, 2021

ஓமிக்ரான் பாதிப்பு உயர்வு.. ரிஸ்க் எடுக்காதீங்க.. மக்களுக்கு மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

 டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு! இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.வேகமாக பரவும் ஓமிக்ரான் வைரஸ்ஓமிக்ரானை தடுக்கும் வகையில் நமது நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் இதுவரை 101 ஓமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.மகாராஷ்டிரா பர்ஸ்ட்இந்த நிலையில் இந்தியாவில் எதிர்பார்த்ததை விட ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் இப்போது 101 ஓமிக்ரான்பாதிப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 32 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் உள்ளன. ராஜஸ்தான் 17 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.தீவிரமாக உள்ளதுஓமிக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளதை உறுதிபடுத்துவதுபோல் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ள ஓமிக்ரான் வழக்குகளில் மூன்று வயது சிறுவன் மற்றும் 18 மாத பெண் குழந்தை ஆகியோரும் பாதிப்பட்டுள்ளனர் என்பது சோகமான விஷயமாகும். இதனால் நாட்டு மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.மக்களுக்கு வேண்டுகோள்மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் புதிய வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.மக்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment