கிருஷ்ணகிரி மாவட்டம் , சூளகிரி வட்டம் , பேரிகை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் பேரிகை சுற்று வட்டார பகுதியில் படித்து வரும் மாணவர்களின் நலம் கருதியும் , மாணவர்களின் ஒழுக்கம் கருதியும் பேரிசை சுற்று வட்டார பகுதியில் நடத்தி வரும் முடி வெட்டுதல் கடைகளில் ( Gens Beauty Parlor ) 05.12.2021 முதல் பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்துவதில் ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் என்றும் , ஆடம்பரமான முடி திருத்தங்கள் ( Stylish Heir Cutting ) செய்யக்கூடாது என்றும் அனைத்து முடி திருத்தும் கடை உரிமையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
தவறும் பட்சத்தில் பள்ளி மாணவர்களை கண்காணித்து அவருக்கு ஒழுக்கம் இல்லாமல் முடி திருத்திய கடைமீது தக்க நடவடிக்கை எடுத்து உரிய அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
N. தியாகராஜ் தலைவர் கிருஷ்ணகிரி மாவட்ட நாவிதர் நலச் சங்கம்
No comments:
Post a Comment