தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான மாதிரித் தோ்வுகள் நடத்தவும், வினா வங்கி தொகுப்பு வழங்கவும் பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவு தோ்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயா்கல்வி நிறுவனங்களில் சேர, ஜேஇஇ நுழைவு தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட் தோ்வுக்கு, தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் அரசு பள்ளி மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிப்பதுடன், அவா்களுக்கு மாதிரி தோ்வுகளை நடத்தவும், தோ்வுகளுக்கான வினா வங்கி வழங்கவும், பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
இதற்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி ) மூலமாக ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. வேலூா், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு போட்டித் தோ்வுகளுக்கான மாதிரி தோ்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment