ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வா ? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 17, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித்தேர்வா ?

 2013 ஆம் ஆண்டு  தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று  60,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகறார்கள்


முந்தைய  ஆட்சியில் பணி வேண்டி பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் எங்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை. மேலும் கடந்த கால அரசு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்கள் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படும் என ஒரு அரசாணையை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து எதிர்கட்சித்தலைவர் கடும் கண்டனத்தை பதிவுசெய்ததுடன்  2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கோரிக்கை எண் (177)ல் "2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என  வாக்குறுதியை அளித்தது மகிழ்ச்சி. 

  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வில் தேர்ச்சிப்பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டி தேர்வென்பது ஜனநாயகத்திற்கு முரணான அறிவிப்பு

இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றை  கடந்தகாலத்தில் அறிவித்தது ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் இன்னும் பழைய நடைமுறையே தொடருவது மனவேதனையளிக்கிறது. மக்களாட்சி நடத்திவரும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள்  149/20.07.2018 அரசாணையினை ரத்துசெய்து  புதிதாக இக்கல்வியாண்டில் மட்டும் சுமார் 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளார்கள்.


மேலும்

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கும்  ஆசிரியர்களுக்கு   தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருப்பவர்களுக்கு தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் ஏற்படக்கூடிய ஆசிரியர்  காலிப்பணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து பணி வழங்கி  வாழ்வாதாரத்தை காத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன்  வேண்டுகிறேன்.

 பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

No comments:

Post a Comment