தொடக்க கல்வி டிப்ளமா தேர்வுக்கு விடைத்தாள் நகலை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா தேர்வின் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விரும்பினால், உரிய கட்டணம் செலுத்தி, வரும் 16, 17ம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment