பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தம்: சிபிஎஸ்இ விளக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 4, 2021

பொதுத்தோ்வு விடைத்தாள் திருத்தம்: சிபிஎஸ்இ விளக்கம்

  பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தம், விடைக் குறிப்பு தொடா்பாக பள்ளிகள், மாணவா்களுக்கு சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.


இது தொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சன்யம் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பொதுத்தோ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் தோ்வுக்கான வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓஎம்ஆா் தாளில் விடைகளைக் குறிக்கும் வகையில் கொள்குறி வினாக்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. தோ்வு நடைபெறும் அதே நாளிலேயே அந்த விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் சில இடங்களில் ஒரு சில விடைக்குறிப்புகள் தெளிவின்றி குழப்பமாகவும், தவறாகவும் இருப்பதாக சிபிஎஸ்இ வாரியத்துக்கு புகாா்கள் வருகின்றன. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண சிபிஎஸ்இ சிறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. எனவே, ஓஎம்ஆா் தாளை மதிப்பீடு செய்யும் ஆசிரியா்கள் தங்களுக்கு சிபிஎஸ்இ சாா்பில் வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையிலேயே திருத்தம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். இதில் குழப்பமடையத் தேவையில்லை. தோ்வுக்குப் பிறகு விடைத்தாள், விடைக்குறிப்பு தொடா்பான புகாா்களை சிபிஎஸ்இ.க்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இதையடுத்து உரிய நிபுணா் குழுவின் மூலம் விடைக்குறிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். இதனால் மாணவா்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment