சென்னை: தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்பது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் முதல் ஓமிக்ரான் கொரோனா கேஸ் பதிவாகி உள்ளது. சென்னையை சேர்ந்தவருக்கு ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது.வேகமாக கேஸ்கள் அதிகரித்த நிலையில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.சென்னைதமிழ்நாட்டில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்டவர் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதில், ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. அவர் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்துள்ளார். அவருக்கு சோதனை செய்யப்பட்டதில் ஓமிக்ரான் உறுதியானது.தொடர்புஅவருடன் தொடர்பில் 8 பேர் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தை. இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இதுவரை தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களில் 41 பேருக்கு ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஜீன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.இரண்டு டோஸ்சென்னையில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நபர் அந்த இரண்டு டோஸ் போட்டுள்ளார். இதனால் அவருக்கு லேசான அறிகுறியே உள்ளது. எனவே மக்கள் இதை பற்றி அச்சப்பட கூடாது. மாறாக மக்கள் தொடர்ந்து வேக்சின் போட வேண்டும். அதுவே ஓமிக்ரான் பரவலை தடுக்கும்.டிரேசிங்அதேபோல் அந்த நபருடன் விமானத்தில் வந்தவர்கள் டிரேஸ் செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம், என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment