தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் இந்த மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்தியாவிலும் ஓமிக்ரான் வேகம்இந்தியாவிலும் ஓமிக்ரான்
வைரஸ் ஏற்கனவே புகுந்து விட்டது. முதன் முதலாக கர்நாடகா மாநிலத்தில் கால் பதித்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, மகாரஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா என பல்வேறு மாநிலங்களுக்கு பரவி விட்டது. இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவை விட இதன் ஆபத்து குறைவுதான் என்று ஒரு பக்கம் கூறினாலும், மறு பக்கம் இது ஆபத்தானதுதான் என்று தகவல்கள் வருகின்றன.ஆஸ்ட்ராஜெனெகா பூஸ்டர் டோஸ்கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக செயல்பட்டு வரும் தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்திறன் மிக்கதா என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வு நடத்தி வரும் நிலையில் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஓமிக்ரான் வைரசுக்கு எதிராக வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட வக்ஸ்வேரியா என்ற பிராண்ட் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்படும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் ஓமிக்ரானுக்கு எதிரான செயல் திறன் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. அப்போது ஓமிக்ரான் வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை(ஆண்டிபாடி) அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.ஆய்வு முடிவுகள்அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட செரா, இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு டெல்டா மாறுபாட்டிற்கு எதிராகக் காணப்பட்ட அளவுகளுடன் ஒப்பிடும்போது, ஒமிக்ரான் மாறுபாட்டை நடுநிலையாக்க முடிந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.ஆன்டிபாடிகளின் அளவுகள் அதிகரிப்புமேலும், மூன்றாவது டோஸுக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அளவுகள், முன்னதாக டெல்டா உள்ளிட்ட பிற வகைகளால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் காணப்பட்டதை விட அதிகமாக இருப்பதும் ஆய்வில் உறுதியாகி உள்ளது. எப்படியோ ஏதாவது ஒரு தடுப்பூசியை கொண்டு ஓமிக்ரான் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது
No comments:
Post a Comment