ஓமிக்ரன் உருமாறிய கொரோனா.. இந்தியாவில் அடுத்த அலையை ஏற்படுத்தலாம்.. டாப் ஆய்வாளர் முக்கிய ஆய்வு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 3, 2021

ஓமிக்ரன் உருமாறிய கொரோனா.. இந்தியாவில் அடுத்த அலையை ஏற்படுத்தலாம்.. டாப் ஆய்வாளர் முக்கிய ஆய்வு

 ஓமிக்ரான் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த 3ஆம் அலையை ஏற்படுத்துவதற்கான அனைத்து ஆற்றல்களும் ஓமிக்ரான் வைரசுக்கு இருப்பதாக இந்தியாவின் முக்கிய மரபணு வரிசைப்படுத்துதல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த நவ. மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரியளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின. நான் எம்ஜிஆர் காலத்து அதிமுக உறுப்பினர்.. உள்கட்சி தேர்தலே சட்டத்திற்கு புறம்பானது.. தொண்டர் பரபரப்புஓமிக்ரான் கொரோனாபல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குத் தடை வித்துள்ள நிலையில், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினருக்கு தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்துவிட்டன. இருப்பினும் கூட, தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 2 பேருக்கு பாதிப்புகடந்த வியாழக்கிழமை இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணி ஒருவர் உட்பட 2 பேருக்கு கர்நாடகாவில் புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து. வரும் காலங்களில் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்தும் என்றே அஞ்சப்படுகிறது. ஓமிக்ரான் எந்தளவு வேகமாகப் பரவும் எவ்வளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.3ஆம் அலையை ஏற்படுத்தலாம்இந்நிலையில், இந்தியாவின் முக்கிய மரபணு வரிசைப்படுத்துதல் நிபுணரானஇன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டகிரேடிவ் பயாலஜியின் இயக்குநர் அனுராக் அகர்வால் கூறுகையில், "இந்தியாவில் 3வது அலையை உருவாக்கும் அனைத்து அம்சங்களையும் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கொண்டுள்ளது. தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த உருமாறிய கொரோனா மிகவும் சக்திவாய்ந்த நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கலாம் என்றே கருதுகிறேன். வேகமாக மேற்கொள்ளப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனை, கட்டாய தனிமைப்படுத்தல் ஆகியவை தான் ஓமிக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வழிகள்,அதிகபட்ச தடுப்பாற்றல்கொரோனா வைரசில் இருந்து குணமடைந்த பிறகு, வேக்சின் செலுத்தியவர்களுக்குத் தான் அதிகபட்ச தடுப்பாற்றல் இருக்கிறது. இந்தியாவில் வேக்சின் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. இருப்பினும், மக்கள்தொகையில் குறிப்பிட்ட சதவீதம் பேர் இன்னும் கூட வேக்சின் போடத் தயக்கம் காட்டுகின்றன. அவர்களுக்கு முதலில் வேக்சின் போடும் பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.மத்திய அரசுஅதேநேரம் டெல்டா கொரோனாவால் நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தளவுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் உருமாறிய கொரோனா எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறை, ஏற்கனவே டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வேக்சின் பணிகளால் ஓமிக்ரான் பாதிப்பு அவ்வளவு மோசமாக இருக்காது என்றே தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை நாட்டில் 125 கோடி டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.,  

No comments:

Post a Comment